மகிழ்ச்சியும், நிம்மதியும் தான் ஒரு மனிதனுக்கு அதிகம் தேவையானது. பணம் சம்பாதித்து வைத்தாலும், மகிழ்ச்சி இல்லையென்றால் அது அனைத்தும் இல்லாததற்கு சமமே. பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், வேலையின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகள் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையே பரிதவித்து வருகிறது. இந்த நிலையில், ஒரு நாடு 6 ஆண்டுகளாக மகிழ்ச்சியான நாடு என்ற பெயரை பெற்றுவருகிறது. கணக்கெடுப்பின் படி, உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற பெயரை பெற்றது பின்லாந்து நாடு தான். இங்குள்ள பெரும்பாலான மக்கள் ஒரு போதும் எளிதில் ஏமாற்றமடையமாட்டார்கள் என சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
உளவியலாளர் ஃப்ராங் மார்டெல்லாவின் கூற்றுபடி, இந்த நாடு மகிழ்ச்சியாக இருக்க 3 முக்கிய காரணங்கள் உள்ளன. இதை மற்ற நாடுகளும் பின்பற்றினால் அவர்கள் வாழ்விலும் மகிழ்ச்சியாக இருக்கலாம். மேலும் ஒற்றுமை உணர்வு இருக்கும். ஒற்றுமையாக வாழ வேண்டும்: அனைவருடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே முதல் விதி. இந்த நாட்டு மக்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை கவனித்து கொள்ள சிறு வயதில் இருந்தே கற்பிக்கப்படுகிறார்கள். இது அவர்களின் வளர்ச்சியின் முக்கியமான பகுதியாகும். அனைவரிடமும் நட்புடன் பழக வேண்டும் என்று கற்பிக்கப்படுவதால், அவர்கள் சிரித்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பின்லாந்தில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் ஒவ்வொரு குடும்பமும், தங்களது அண்டை வீட்டாருடன் நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன். அனைத்து பிரச்சனைகளையும் வெளியில் சொல்வதன் மூலம் பாரம் குறையும். அப்படி தான் இந்த நாட்டில் அனைவரிடமும் அன்பாய் பழகுவதன் மூலம் மகிழ்ச்சி குதூகலிக்கிறது.