JEE மெயின் 2022 தேர்வுக்கான தேதிகள் மாற்றம்; புதிய அட்டவணையை இங்கே சரிபார்க்கவும்!

JEE மெயின்ஸ் 2022 தேர்வு ஏப்ரல் 21, 24, 25, 29 மற்றும் மே 1, 4, 2022 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். JEE மெயின்ஸ் தேர்வுக்கான

தேசிய தேர்வு முகமை (NTA), JEE மெயின்ஸ் 2022 தேர்வுக்கான திருத்தப்பட்ட தேதிகளை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட தேதிகளில் படி, JEE மெயின்ஸ் 2022 தேர்வு ஏப்ரல் 21, 24, 25, 29 மற்றும் மே 1, 4, 2022 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். JEE மெயின்ஸ் தேர்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in மூலம் சரிபார்க்கலாம்.

போர்டு தேர்வு தேதிகளுடன் JEE மெயின்ஸ் தேர்வு தேதிகள் முரண்படுவதால், அமர்வு 1 இன் தேதிகளை மாற்றக் கோரி விண்ணப்பதாரர்கள் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து, “மாணவர் சமூகத்தின் தொடர்ச்சியான கோரிக்கை மற்றும் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தேசிய தேர்வு முகமை JEE (மெயின்) – 2022 அமர்வு 1 தேதிகளை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது” என்று NTA அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட தேதியின் படி, JEE மெயின் இப்போது ஏப்ரல் 21, 24, 25, 29 மற்றும் மே 1, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும். இளங்கலை பொறியியல் தேர்வு ஏப்ரல் 16, 17, 18, 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்தது.

ஜேஇஇ மெயின் 2022, நாட்டிலுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வாகும். JEE மெயின் செயல்திறன் அடிப்படையில், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் JEE Advanced 2022 இல் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள். JEE மெயின் தாள் 1, அல்லது BTech தாள், மற்றும் தாள் 2 அல்லது BArch மற்றும் BPlaning தாள் ஆகிய இரண்டு தாள்களுக்கு நடைபெறும். BArch மற்றும் BPlanning தாள்கள் முறையே தாள் 2A மற்றும் தாள் 2B என தனித்தனியாக நடத்தப்படும்.