மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். இவர்களி்ல் 9 பேர் இந்தியர்கள்.
மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் பவர் தங்கி இருந்தனர். இந்த கட்டத்தில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது அங்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர்கள் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்தது அலறியடித்து கொண்டு அங்கிருந்து வெளியேற முயன்றனர். ஆனால், கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்ததால் அவர்களால் வெளியேற முடியவில்லை.
தவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள், கிட்டதட்ட 4 மணிநேர போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் இந்த தீ விபத்தில் மூச்சுத்திணறியும், உடல் கருகியும் 10 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 9 பேர் இநதியர்கள்.
உயிரிழந்தவர்கள் எந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பன உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் உடலை தாயகத்துக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவி்த்துள்ளது.
முதல்வர்: மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவருதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் இந்திய அரசின் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.