இந்தியாவில் நாளை பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் 5G சேவையை துவக்கவுள்ளார். இதில் இந்தியாவின் பல தகவல்தொர்பு பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 முதல் இந்தியாவில் 5G சேவையை துவக்கிவைக்கிறார். இதனை அவர் India mobile Congress 2022 அன்று வெளியிடுகிறார்.
முதல் கட்டமாக இந்த சேவையை குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே வழங்கவுள்ளார். இந்த புதிய 5G சேவை இந்தியாவில் பல வாய்ப்புகளையும் சமூகத்தின் புதிய தேவைகளை பூர்த்திசெய்யும். இதனால் இந்தியா வரும் 2035 ஆம் ஆண்டு 450 பில்லியன் டாலர் சந்தையாக மாறும்.
இந்தியாவின் மிகப்பெரிய Spectrum ஏலம் தொடங்கியது. இதற்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் போனது. இது 40 கட்டமாக 7 நாட்கள் நடந்தது. இதில் 51.2GHZ Spectrum விற்பனயானது. மொத்தமாக 72GHZ அளவிற்கு இருந்தது. மொத்தமாக 71% அளவிற்கு விற்பனையாகியது. இது இந்தியா முழுவதும் 5G சேவையை அடுத்த 3 ஆண்டுகளுக்கு பயன்படுத்த சிறப்பானதாக இருக்கும்.
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் Jio 5G அதிகபட்சமாக 88 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. முதலில் அக்டோபர் 1 பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கிவைக்கிறார். முக்கிய நகரங்களாக உள்ள டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் வரும் தீபாவளி அன்று வெளியிடவுள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் Jio 5G சேவை இந்தியாவில் அனைத்து நகரங்களுக்கும் வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது மிகப்பெரிய நிர்வாணமாக இருந்த பாரதி ஏர்டெல் நிறுவனம் அதன் 5G சேவையை இந்தியா முழுவதும் வரும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் வழங்கும் என்றும் கிராமப்புறங்களில் மார்ச் 2024 ஆம் ஆண்டிற்குள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.